நமது உடலில் நாடித்துடிப்பை உணரக்கூடிய இடங்கள்
(PALPABLE ARTERIES IN OUR BODY)
நாடித்துடிப்பு (pulse) என்றால் என்ன?
நாடித்துடிப்பு என்பது நமது இதயம் துடிப்பதால் நாடிகளில் ஏற்படும் துடிப்பை தொடுஉணர்வு மூலம் அறியக்கூடியதாகும். இது பெரும்பானமையான சந்தர்ப்பங்களில் இதயத்துடிப்பு வீதத்துக்குச் சமமானதாகும். நாடித்துடிப்பு நிமிடத்துக்கு எத்தனை என உடலின் சில பகுதிகளில் மட்டுமே தொட்டு உணரப்படக்கூடியது.
இதயத்துடிப்பு (heartbeat) என்றால் என்ன?
இதயத்துடிப்பு
என்பது ஒரு நிமிடத்துக்கு இதயம் எத்தனை தடவை துடிக்கிறது என்பதன்
அளவு ஆகும். சராசரியாக, வளர்ந்த நபரின் இதயத் துடிப்பு 70 - 80 துடிப்பு/நொடி ஆக இருக்கும்.
பொதுவாக, வளர்ந்தோரில் 60 முதல் 100 வரை இயல்பான துடிப்பு
எனக் கருதப்படுகின்றது.
நமது உடலில் நாடித்துடிப்பை உணரக்கூடிய இடங்கள் (PALPABLE ARTERIES IN OUR BODY)
உடலின் மேற்பகுதியில் நாடி அமைந்துள்ள இடங்களில் மட்டுமே நாடித்துடிப்பு தொட்டு உணரப்படமுடியும். இவ்விடங்களில் நாடியை அதன் கீழ் உள்ள அமைப்புடன் (பொதுவாக எலும்பு) விரல் மூலம் சிறிது அழுத்துவதால் நாடித்துடிப்பு அறியப்படுகின்றது.
1. CAROTID ARTERY (கரோட்டிட் தமனி)
2. RADIAL ARTERY (ரெடியல் தமனி)
3. BRACHIAL ARTERY (பிரேக்கியல் தமனி)
4. FEMORAL ARTERY (பெமோரல் தமனி)
5. POPLITEAL ARTERY (பாப்லிடியல் தமனி)
6. POSTERIOR TIBIAL ARTERY (பின்புற டிபியல் தமனி)
7. DORSALIS PEDIS ARTERY (டார்சலிஸ் பெடிஸ் தமனி)
8. ULNAR ARTERY (அல்நார் தமனி)
கை மணிக்கட்டு, முழங்காலின் பிற்பகுதி, கழுத்து, முழங்கை உட்பகுதி, குதிக்கால் மேற்பகுதி, பாதத்தின் ஒரு பகுதி என்பன நாடித்துடிப்பு அறியக்கூடிய இடங்களாகும்.
Comments
Post a Comment