நமது உடலில் நாடித்துடிப்பை உணரக்கூடிய இடங்கள் (PALPABLE ARTERIES IN OUR BODY) நாடித்துடிப்பு (pulse) என்றால் என்ன? நாடித்துடிப்பு என்பது நமது இதயம் துடிப்பதால் நாடிகளில் ஏற்படும் துடிப்பை தொடுஉணர்வு மூலம் அறியக்கூடியதாகும். இது பெரும்பானமையான சந்தர்ப்பங்களில் இதயத்துடிப்பு வீதத்துக்குச் சமமானதாகும். நாடித்துடிப்பு நிமிடத்துக்கு எத்தனை என உடலின் சில பகுதிகளில் மட்டுமே தொட்டு உணரப்படக்கூடியது. இதயத்துடிப்பு (heartbeat) என்றால் என்ன? இதயத்துடிப்பு என்பது ஒரு நிமிடத்துக்கு இதயம் எத்தனை தடவை துடிக்கிறது என்பதன் அளவு ஆகும் . சராசரியாக, வளர்ந்த நபரின் இதயத் துடிப்பு 70 - 80 துடிப்பு / நொடி ஆக இருக்கும் . பொதுவாக , வளர்ந்தோரில் 60 முதல் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது . நமது உடலில் நாடித்துடிப்பை உணரக்கூடிய இடங்கள் (PALPABLE ARTERIES IN OUR BODY) உடலின் மேற்பகுதியில் நாடி அமைந்துள்ள இடங்களில் மட்டுமே நாடித்துடிப்பு தொட்டு உணரப்படமுடியும் . இவ்விடங்களில் நாடியை அதன் கீழ் உள்ள அமைப...
KNOWLEDGE IS POWER