எலும்புகள் பற்றிய ஆச்சரியமான 5 உண்மைகள் (AMAZING 5 FACTS ABOUT BONE) 1, நமது உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் (bones) அமைந்துள்ளன . ஆனால் நாம் பிறக்கும்போது நமக்கு 300 எலும்புகள் அமைந்திருக்கும் . நாம் வளரும்போது அது மற்ற எலும்புகளுடன் இணைந்துவிடும் . 2, நமது உடலின் மிக பெரிய எலும்பு தொடையில் அமைந்துள்ளது . அதன் பெயர் தொடையெலும்பு (femur) ஆகும் . அதேபோல் நமது உடலின் மிக சிறிய எலும்பு காதில் அமைந்துள்ளது அதன் பெயர் ஸ்டேப்பிஸ் (stapes) ஆகும். 3, நமது உடலில் மொத்தம் 26 முள்ளெலும்புகள் (vertebrae) உள்ளன . அதில் கழுத்தில் (cervical) 7 எலும்புகளும் , மார்பில் (thoracic) 12 எலும்புகளும் , இடுப்பில் (lumbar) 5 எலும்புகளும் , திருவெலும்பு (sacrum bone) 1, வால் எலும்பு (tail bone or coccyx bone) 1 முறையே மேலிருந்து கீழாக அமைந்துள்ளன . ஆனால் இதில் திருவெலும்பு ஐந்து இணைத்து ஒரே எலும்பாக மாறுகிறது . அதேபோல் , வால் எலும்பு நான்கு இணைந்து ஒரே எலும்பாக மாறுகிறது எனவே , இதைவைத்து பார்த்தால் நமது உடம்பில் ...
KNOWLEDGE IS POWER