எலும்புகள் பற்றிய ஆச்சரியமான 5 உண்மைகள்(AMAZING 5
FACTS ABOUT BONE)
1, நமது உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் (bones) அமைந்துள்ளன. ஆனால் நாம் பிறக்கும்போது
நமக்கு 300 எலும்புகள் அமைந்திருக்கும். நாம் வளரும்போது அது மற்ற எலும்புகளுடன் இணைந்துவிடும்.
2, நமது உடலின் மிக பெரிய எலும்பு தொடையில் அமைந்துள்ளது. அதன் பெயர் தொடையெலும்பு (femur) ஆகும். அதேபோல் நமது உடலின் மிக சிறிய எலும்பு காதில் அமைந்துள்ளது அதன் பெயர் ஸ்டேப்பிஸ் (stapes) ஆகும்.
3, நமது உடலில் மொத்தம் 26 முள்ளெலும்புகள் (vertebrae) உள்ளன. அதில் கழுத்தில் (cervical) 7 எலும்புகளும், மார்பில் (thoracic) 12 எலும்புகளும், இடுப்பில் (lumbar) 5 எலும்புகளும் , திருவெலும்பு (sacrum bone) 1, வால் எலும்பு (tail bone or coccyx bone) 1 முறையே மேலிருந்து கீழாக அமைந்துள்ளன. ஆனால் இதில் திருவெலும்பு ஐந்து இணைத்து ஒரே எலும்பாக மாறுகிறது. அதேபோல், வால் எலும்பு நான்கு இணைந்து ஒரே எலும்பாக மாறுகிறது எனவே, இதைவைத்து பார்த்தால் நமது உடம்பில் மொத்தம் 33 முள்ளெலும்புகள் உள்ளன.
4, நமது உடம்பில் மொத்தம் 12 இணை (pair) விலாஎலும்புகள் (ribs) அமைந்துள்ளன. அதில் முதல் 7 இணை விலாஎலும்புகள் உண்மை விலாஎலும்புகள் (true ribs) என்றும், 8 முதல் 10வது இணை விலாஎலும்புகள் வரை பொய் விலாஎலும்புகள் (false ribs) என்றும், 11 மற்றும் 12வது இணை விலாஎலும்புகள் மிதக்கும் விலாஎலும்புகள் (floating ribs) என்றும் அழைக்கப்படுகிறது.
5, எலும்பானது பெரியாஸ்டியம் (periosteum) என்னும் உறையினால் மூடப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதியில் இரத்தக்குழல்களும், நரம்புகளும் உண்டு.
Hy , really it's useful and clear . Learnt something new today especially the smallest bone in the ear , literally today only I came too know about it too ..... Lol
ReplyDeleteNice! Its Useful
ReplyDeleteReally usefull bro ,keep posting more blogs like this ...
ReplyDeleteIt was very useful and informative..💯
ReplyDeleteIt's really super ❤🔥🔥
ReplyDelete