நமது உடலில் அமைந்துள்ள 206 எலும்புகளின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்கள் (Tamil and English names of 206 bones located in our body)
நமது உடலில் அமைந்துள்ள 206 எலும்புகளின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்கள் (Tamil and English names of 206 bones located in our body)
நமது உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன என்று கேட்டால் நம் அனைவருக்கும் தெரியும் . ஆனால் அது என்ன என்னவென்று நீங்கள் அறிவீர்களா ?
இப்போது அதை பற்றி பார்ப்போம்.
நமது உடம்பில் 206 எலும்புகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...... அதனை இங்கு இரண்டு விதமாக பிரிக்கலாம் . அவை,
1. அச்சுச்சட்டகம் (axial skeletal system)- 80
2. இணையுறுப்புச்சட்டகம்(appendicular skeletal system) – 126
நாம் முதலில் அச்சுச்சட்டகத்தில் (axial skeleton) உள்ள 80 எலும்புகள் எவை எவை என்று பார்ப்போம்.
தலையின் மேற்புறத்தில் 8 மண்டையோட்டு (cranial bone) எலும்புகள் உள்ளன. அவை,
சுவரெலும்பு (parietal bone) -2
கன்னவெலும்பு (temporal bone) - 2
பிடரருகெலும்பு (occipital
bone) - 1
ஆப்புருவெழும்பு (sphenoid
bone) - 1
நெய்யரியெலும்பு (ethmoid bone) - 1
தலையின் முன்புறத்தில் 14 முகவெலும்புகள் (facial bones) உள்ளன. அவை,
மேல்தாடை எலும்பு (maxilla) - 2
கீழ்த்தாடை எலும்பு (mandible) - 1
அண்ணவெலும்பு
(palatine bone) - 2
கன்னத்தின் வளையெலும்புகள் (zygomatic
bone) - 2
மூக்கினிடைத்தட்டெலும்புகள் (nasal bone) - 2
கண்ணீர்ச் சுரப்பியண்மை எலும்புகள் (lacrimal bone) - 2
மூக்குச்சுவர்
எலும்பு (vomer) - 1
கீழ்மூக்கு சங்கெலும்பு (inferior nasal conchae) - 2
நமது தலைப்பகுதியில் 6 உட்காது எலும்புகளும் (ear bones) அமைந்துள்ளன. அவை,
சம்மட்டியுரு
(malleus) - 2
பட்டையுரு
(incus) - 2
ஏந்தியுரு (stapes) - 2
நமது தொண்டை(throat) பகுதியில் ஒரு எலும்பு அமைந்துள்ளது அதன் பெயர்,
நாவடி எலும்பு (hyoid) - 1
நமது மார்புக்கூட்டில் (thorax) 25 எலும்புகள் அமைந்துள்ளன. அவை,
மார்பெலும்பு (sternum) - 1
விலா எலும்புகள் (ribs) - 24
நமது முதுகின் பின்புறத்தில் முள்ளந்தண்டெலும்புகள் நிரலில் (vertibral column) 26 எலும்புகள் அமைந்துள்ளன. அவை,
கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்(cervical vertebra) - 7
மார்பு முள்ளந்தண்டெலும்புகள் (thoracic vertebra) - 12
இடுப்பு முள்ளந்தண்டெலும்புகள்(lumbar vertebra) - 5
திருவெலும்பு (sacral bone) - 1
வாலெலும்பு (coccyx bone) - 1
தற்போது நாம், இணையுறுப்புச்சட்டகத்தில் (appendicular skeleton) உள்ள 126 எலும்புகள் எவை எவை என்று பார்ப்போம்.
காரையெலும்பு (clavicle) - 2
தோள்பட்டை எலும்பு (scapula) - 2
நமது மேற்கையில் (upper arm) 2 எலும்புகள் அமைந்துள்ளன. அவை,
மேற்கை எலும்பு (humerus) - 2
நமது முன்கைகளில் (fore arm) 4 எலும்புகள் அமைந்துள்ளன. அவை,
முன்கையெலும்பு (ulna) - 2
ஆரயெலும்பு (radius) - 2
நமது கைகளில் (hand) 54 எலும்புகள் அமைந்துள்ளன. அவை,
மணிக்கட்டு எலும்புகள் (carpal bones) - 16
படகெலும்பு
(scaphoid) - 2
பிறைக்குழி
எலும்பு (lunate) - 2
முப்பட்டை
எலும்பு(triquetrum) - 2
பட்டாணி
எலும்பு (pisiform) - 2
சரிவக
எலும்பு (trapezium) - 2
நாற்புறவுரு
எலும்பு (trapezoid) - 2
தலையுரு
எலும்பு (capitate) - 2
கொக்கி
எலும்பு (hamate) - 2
உள்ளங்கையெலும்புகள் (metacarpal) - 10
விரலெலும்புகள்
(phalanges) - 28
அண்மை
விரலெலும்புகள்
(proximal phalanges) - 10
நடு
விரலெலும்புகள்
(Intermediate phalanges) - 8
தொலை
விரலெலும்புகள் (distal
phalanges) - 10
நமது இடுப்புப்பகுதியில் (hip region) இரண்டு (2) எலும்புகள் ஒன்றாக இணைந்து இடுப்பு வளையத்தை (pelvic girdle) உருவாக்குகிறது. அதன் பெயர் ,
இடுப்பெலும்பு (pelvic bone) - 2
நமது தொடைப்பகுதியில் (thigh region) 2 எலும்புகள் அமைந்துள்ளன. அவை,
தொடையெலும்பு (femur) - 2
நமது கீழ்க்கால் பகுதியில் (leg region) 6 எலும்புகள் அமைந்துள்ளன. அவை,
முழங்காற்சில்லு
(patella) - 2
கீழ்க்கால் உள்ளெலும்பு (tibia) - 2
கீழ்க்கால் வெளியெலும்பு (fibula) - 2
நமது காலடிகளில் (foot) 52 எலும்புகள் அமைந்துள்ளன. அவை,
கணுக்கால்
எலும்புகள் (tarsal) - 14
குதிகால்
(calcaneus) - 2
முட்டி
(talus) - 2
படகுரு
எலும்பு (navicular
bone) - 2
உள்
ஆப்புவடிவ எலும்பு (medial cuneiform bone) - 2
இடை
ஆப்புவடிவ எலும்பு (intermediate cuneiform bone) - 2
வெளி
ஆப்புவடிவ எலும்பு (lateral cuneiform bone) - 2
கனசதுர
எலும்பு (cuboidal
bone) - 2
உள்ளங்கால் எலும்புகள் (metatarsal) - 10
விரலெலும்புகள்
(phalanges) - 28
அண்மை
விரலெலும்புகள்
(proximal phalanges) - 10
நடு
விரலெலும்புகள்
(intermediate phalanges) - 8
தொலை
விரலெலும்புகள் (distal
phalanges) - 10
Was very informative... Thanks for update💯
ReplyDeleteSuper!!!
ReplyDeleteIt's very useful for recall the knowledge abt anatomy of bones✨
ReplyDeleteIn both languages i have leaned today much usefull blog
ReplyDelete